சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பூண்டின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ முதல் முதர பூண்டின் விலை ரூ. 500க்கும், இரண்டாம் தர பூண்டு 450க்கும், மூன்றாம் தர பூண்டு 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில்லரை விற்பனை கடைகளில் முதல் தர பூண்டின் விலை ஒரு கிலோ 550 முதல் 600 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது. சில்லறைக் கடைகளில் ரூ.430 வரை விற்பனையாகிறது.