வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து இன்று முதல் (வெள்ளிக்கிழமை) ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைந்த நிலையில், இந்த மாதம் மேலும் ரூ.157.50 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிகப் பயன்பாட்டிக்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து, ரூ.1,695-க்கு விற்பனையாகிறது.

இதனால் கேஸ் சிலிண்டர் நம்பி வியாபாரம் செய்வோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News