இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1118.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போல இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 1070.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது 1120.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.