”கட்டா குஸ்தி” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஷ்ணு விஷால் நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் டிசம்பர் 2-ஆம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இளம் நடிகை ஐஸ்வர்யா லச்ஷ்மி ஜோடியாக நடித்த இப்படத்தில், காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவான இப்படம், ஒரே வாரத்தில் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.