குழந்தையை பெற்றெடுக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. குவியும் வாழ்த்து..

புது டெல்லியை சேர்ந்தவர் ஆதித்யா. ஓரிணச் சேர்க்கையாளரான இவருக்கும், அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த அமித்ஷா என்பவருக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. ஓவர் நைட்டில் இந்த தம்பதி பிரபலமான நிலையில், அவர்கள் தற்போது இன்னொரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், தங்களது குடும்பத்தில் இன்னொரு நபர் இணைய இருப்பதாகவும், எங்களது நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். மேலும், ஸ்கேன் செய்தபோது எடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தையும், பதிவு செய்துள்ளனர். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News