பாஜக இன்னும் வளரவில்லை…அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். அப்போது “இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என தெரிவித்தவர், “திமுகவை வீழ்த்த பலமான கட்சி தேவை என்ற நிலையில் அதிமுகவே பெரிய கட்சி என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசிய பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.

மிகப் பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் போட்டியிடத் தயாராக இல்லை என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News