நடிகை, நடன இயக்குநர், அரசியல்வாதி என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் காயத்ரி ரகுராம். சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவ்வப்போது பிரச்சனையில் சிக்கும் இவர், சமீபகாலங்களாக அமைதியாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம், பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தனது நீண்ட நாள் நேர்த்திக் கடனை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும், மொட்டை அடித்துக் கொண்டு, நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு, கையில் மயிலிறகுடன் இருக்கும், புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவரது பக்தியை பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், உண்மையிலேயே மொட்டை அடிச்சிருக்கீங்களா? கிராபிக்ஸ் பண்ணியிருக்கீங்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.