Connect with us

Raj News Tamil

“இது அஜித்தின் தவறான முடிவு” – திடீரென எழுந்த விமர்சனம்! பதிலடி தந்த நடிகை!

சினிமா

“இது அஜித்தின் தவறான முடிவு” – திடீரென எழுந்த விமர்சனம்! பதிலடி தந்த நடிகை!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் முதன்முறையாக உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், சினிமா விமர்சகர் வி.சி.டி என்பவர், இந்த திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அஜித் தன் சினிமா வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகளில், நேர்கொண்ட பார்வையை தேர்ந்தெடுத்ததும் ஒன்று என்று கூறினார்.

இவரது இந்த விமர்சனத்தை ஏற்க மறுத்த நடிகை காயத்ரி, அவருக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும், ஒரு படத்தின் வெற்றிக்கு, பாக்ஸ் ஆபிஸ் மட்டும் அளவுகோல் கிடையாது.. அந்த திரைப்படம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

More in சினிமா

To Top