காயத்திரி ரகுராம் 6-மாதம் நீக்கம்..! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருப்பவர் காய்த்திரி ரகுராம். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பல்வேறு விமர்சனங்களில் சிக்கிக்கொள்வார்.

அந்த வகையில் பாஜக ஆதரவு ஐடி விங் ஒன்று காய்த்திரியை ஒருமையில் பேசி பதிவிட்டது. இதற்கு அக்கட்சியின் தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வக்குமார் லைக் செய்திருந்த நிலையில், இவரை வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் காயத்திரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி 6-மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.