காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளாரான கேசி வேணுகோபால் மக்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது, காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் ஆனதை நினைவு கூரும் விதமாக தேசத்துக்காக நன்கொடை தாருங்கள். 138, 1380, 13800 என தங்களால் முடிந்த நிதியை மக்கள் அளிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, கட்சியை ஆதரிக்கும் பலரும் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்துவருக்கின்றனர். இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம், ரூ.1380 நன்கொடையாக செலுத்தியுள்ளார். மேலும், நன்கொடை அளித்ததற்கான சான்றையும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.கா விலிருந்து காயத்ரி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.