திமுகவில் இணையும் காயத்ரி ரகுராம்? அமைச்சர் பொன்முடி சொன்ன பதில்!

பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக காயத்ரி ரகுராம் கடந்த நவம்பர் மாதம் கட்சியிலிருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காயத்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கட்சியிலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன் என்று அறிவித்தார். தன்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஒளி அறக்கட்டளை துவக்க விழாவை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடியிடம் ” காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் “பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப் படுவார்கள் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News