காசாவில் 5,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு 4 கழிவறைகள் மட்டுமே!

கடந்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக காசாவில் உள்ள தங்குமிடம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது.

50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்த ஒரு முகாமில் நான்கு கழிவறைகள் மட்டுமே இருந்தன. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தண்ணீர் விநியோகிக்கின்றன.

என்று காசாவில் பணிபுரிந்துவிட்டுக் கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் எமிலி கலாஹான் என்பவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News