காஸா மருத்துவமனை தாக்குதல்; இஸ்ரேல் எதிராக குவியும் கண்டனம்!

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்களும் இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காசாவில் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா.சபையிடம் 22 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காஸா மருத்துவமனையின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகுந்த வருத்தமளிப்பதாகவும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News