இந்திய ஐடி ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த ஜெர்மனி அரசு

ஐரோப்பாவிலேயே பல்வேறு துறைகளிலும் ஜெர்மனி தான் முன்னணியில் இருக்கிறது. ஆனாலும் சில காலமாக அங்குத் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க ஜெர்மனி அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது.

ஜெர்மனியில் தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க அங்குள்ள ஓலாஃப் ஸ்கோல்ஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஓலாஃப் ஸ்கோல்ஸ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் ஜெர்மனிக்கு வந்து வேலை செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் பணிபுரிய எங்களுக்கு ஆட்கள் தேவை, குறிப்பாக ஐடி மற்றும் மென்பொருள் துறையில் அதிகப்படியான ஊழியர்கள் தேவை” என்று அவர் தெரிவித்தார். ஜெர்மனி வர விரும்புவோருக்கு ஜெர்மனி மொழி தெரிந்திருந்தால்.. அது கூடுதல் அட்வான்டேஜாக கருதப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News