ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஷானி லௌக். டேட்டோ கலைஞராக பணியாற்றி வரும் இவர், கடந்த சனிக்கிழமை அன்று, கஸா பகுதியில் நடந்த ட்ரைப் ஆப் சூப்பர் நோவா என்ற இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு திடீரென ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அங்கிருந்த ஷானி உட்பட இசை ரசிகர்களை, பினைக் கைதிகளாக அங்கிருந்து கடத்திச் சென்றனர்.
இதற்கிடையே, ஷானி லௌக் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஷானி லௌக்கின் தாய் ரிச்சர்டா லௌக், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னுடைய மகள் இன்னும் உயிரிழக்கவில்லை என்றும், கஸா பகுதியில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் மூலம், இந்த தகவல் தனக்கு தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய மகளை, ஜெர்மனி அரசாங்கம் மீட்டு கொண்ட வரவேண்டும் என்றும், அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.