கவர்னரே வெளியே போ… இணையத்தில் டிரெண்ட்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கவர்னரே வெளியே போ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்குவதாக நேற்று (ஜூலை 29) இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருந்தார். பின்னர் 5 மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவழக்குகளில் சிக்கியுள்ளதால், அவர் அமைச்சரவை பதவியில் நீடித்தால் அமலாக்கத் துறை விசாரணை பாதிக்கப்படும் எனக்கூறி அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக ஆளுநர் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் நடவடிக்கைக்கு ஆளும் கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்திய அரசியலமைப்புப் படி ஆளுநருக்கு அதிகாரமில்லை என அரசியல் கட்சியைச் சேர்ந்த பலர் சுட்டிக்காட்டினர்.

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கவர்னரே வெளியே போ (#getoutgovernor) (#கவர்னரேவெளியேபோ) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News