தில், தூள் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் தரணி இயக்கத்தில், விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் கில்லி. தெலுங்கு மொழியில் ஒக்கடு என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம், பிறகு தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.
தனலட்சுமி என்ற பெண்ணை, முத்துப்பாண்டி என்ற கொடிய வில்லனிடம் காப்பாற்றுவதை மையமாக கொண்டு உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, விஜயின் திரைவாழ்க்கையில் முக்கியமான இடத்தை பெற்றிருந்தது.
கடந்த 2004-ஆம் ஆண்டு அன்று வெளியான இப்படம், இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் பெற்று விடும். அந்த அளவிற்கு, இன்னும் இப்படம் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆன நிலையில், தற்போது இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது, வரும் 20-ஆம் தேதி அன்று, இப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.