துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித்தின் ரசிகர் ஒருவர், லாரியில் இருந்து கீழே விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காயமே ஆறாத நிலையில், இன்னொரு உயிரிழப்பு ஒன்று நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தனது இளைய மகள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வருவதால், அவரை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு, தனது மனைவி மற்றும் மூத்த மகளுடன் துணிவு படத்திற்கு சுரேஷ் சென்றுள்ளார். தன்னை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு படத்திற்கு சென்றதால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
படம் முடிந்து வீட்டிற்கு வந்த சுரேஷ், மகள் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதுள்ளார். துணிவு படம் பார்க்க முடியவில்லை என்பதற்காக, இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.