மறைந்து கிடக்கும் பல்வேறு கதைகளை, வெளியே கொண்டு வரும் இடமாக சமூக வலைதளங்கள் இருக்கின்றன. இந்த கதைகள் சில நேரங்களில் வெளிப்படும்போது, நமக்கு உத்வேகத்தை அளித்துவிடுகின்றன.
இவ்வாறு இருக்க, முகத்தில் தழும்புகள் உள்ள பெண் ஒருவரின் வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தனது முகத்தில் உள்ள கட்டிகளின் காரணமாக, நான் பல்வேறு நபர்களால் நிராகரிக்கப்பட்டேன். ஆனால், நான் தற்போது மருத்துவர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அந்த பெண், “என்னுடைய முகத்தால் நான் பல வருடங்களாக திருமணம் செய்ய முடியாமல் இருந்தேன். இன்று, என்னுடைய வலியை புரிந்துக் கொண்ட மருத்துவரை, நான் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை, மேக்கப் கலைஞர் அனுப்ரீத் பக்ஷி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், தங்களது விதவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது, முதல் நெட்டிசன், “அழுவாதீங்க” என்றும், இன்னொரு நெட்டிசன், “நீங்கள் உண்மையில் அழகாக தான் இருக்கீங்க, சகோதரி” என்றும் கூறியுள்ளார். 3-வது நெட்டிசன், “அந்த மருத்துவர் ஒரு ஆண்.. அதனால் தான் அவர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். இதுவே அது பெண்ணாக இருந்திருந்தால், இந்த சம்பவம் நிச்சயம் நடந்திருக்காது. அதை அந்த பெண் செய்திருக்க மாட்டாள்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு, மருத்துவர் ஒரு பெண்ணின் முகத்தை பார்க்காமல், அவரது மனதை பார்த்துக் ஏற்றுக் கொண்ட சம்பவம், பலரால் பாராட்டப்பட்டு வரும் நிலையில், இதற்கு நேர் எதிராக, இன்னொரு சம்பவம் கர்நாடகாவில் சமீபத்தில் நடந்துள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த மணப்பெண் ஒருவர், திருமணத்திற்கு முன்பு, வீட்டின் அருகில் இருந்த பியூட்டி பார்லருக்கு, அழங்காரம் செய்துக் கொள்வதற்கு சென்றுள்ளார். ஆனால், அவர்கள் செய்த மேக்கப்பால், அந்த பெண்ணின் முகம் கருமையாக மாறியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகன், அந்த திருமணத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.