ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். தனியார் டிவிக்கு பேட்டியளித்த இவர், தங்கள் கட்சி தலைவர்கள் மீது 167 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.
மோடி தலைமையான அரசு, அரசியல் ஆதாயங்களுக்காக சிபிஐ மற்றும் அமலாக்க துறையினரை தவறாக பயன்படுத்துவதாக கூறினார். மேலும் மத்திய அமைப்புகளை ஒரு நாள் என்னிடம் கொடுத்தால் பாஜக தலைவர்கள் பாதி பேர் ஜெயிலில் இருப்பார்கள் என்றார். ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை இன்று வரை நீதிமன்றங்களால் நிரூபிக்கமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.