விஜயுடன் கூட்டணியா? – சூசகமாக பதில் சொன்ன ஜி.கே.வாசன்!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, திமுக அரசு தவறிவிட்டது என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின், இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட மாநில தலைவர் ஜி.கே.வாசன், மணமக்களை வாழ்த்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும், இதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவரிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், இது கட்சியை பலப்படுத்தக் கூடிய காலக்கட்டம் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான், கூட்டணி அமையும் என்றும், சூசகமாக பதில் அளித்தார்.

RELATED ARTICLES

Recent News