சினிமா
பல கோடிக்கு விலைபோன கோட் படத்தின் ஆடியோ ரைட்ஸ்- எத்தனை கோடி தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்துவரும் திரைப்படம் கோட். இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், லைலா, சினேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு வேலைகள் ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.
பிரபல T-Series நிறுவனம் விஜய்யின் 68வது படத்தின் ஆடியோவை ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இவர்கள் இதற்கு முன் விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)