ஜனாதிபர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து, இன்று நாடாமன்றத்தில், 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது இதுகுறித்து உரையாற்றியுள்ள நிர்மலா சீதாராமன், ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாகவும், தங்கம், வெள்ளி, பித்தளை, சிகரெட் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இனிவரும் நாட்களில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.