சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 6-வது தங்கத்தை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.