ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. இதன் மூலன் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வருகிறது. மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றது. இது நடப்பு விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 100-வது பதக்கம் ஆகும். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.
இதன் மூலன் இந்தியா 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது.