உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா்.அப்போது, பயணி ஒருவரின் காஃபி இயந்திரம் மீது சந்தேக பார்வை விழுந்தது. அப்போது அதனை கைப்பற்றி நடத்திய சோதனையில், காஃபி இயந்திரத்தில் மறைத்து வைத்து கடத்த செல்ல முயன்ற 3.497 கிலோ தங்க சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
#WATCH | Lucknow Customs today recovered gold weighing 3.497 kg hidden in a coffee machine. Two cylindrical gold bars were found inside the machine: Customs
— ANI (@ANI) December 31, 2023
(Video source: Customs) pic.twitter.com/7FCpk7TTX7
பின்னா் , அதை சுத்தியல் மற்றும் பிளேடால் அறுத்து, உடைத்தனர். அப்போது, அதனுள் இருந்த சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், இந்த வீடியோவனது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற சம்பவம் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போதும், சுங்க அதிகாரிகள் காஃபி இயந்திரத்தில் இருந்து ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.