நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது. ஆனால், இந்த தங்கத்தின் விலை, கடந்த காலமாக அதிகரித்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினர் வாங்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி, ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.