ஏழை எளிய மக்களுக்கான சிறந்த முதலீடாக இருப்பது தங்கம் தான். தங்கத்தில் முதலீடு செய்தால், அது பல மடங்காக உயர்ந்து, மீண்டும் நமக்கே பயன்படும்.
ஆனால், தற்போது தங்கம் விற்கும் விலையை பார்த்தால், ஏழை மக்களை விடுங்கள், நடுத்தர வர்க்கத்தினர் கூட, வாங்க முடியாத அளவில் தான் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய தங்கத்தின் விலை தொடர்பான நிலவரம், தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து, ரூ.44 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்டுகிறது.
இதேபோல், கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து, 5 ஆயிரத்து 565 ரூபாய்-க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 77.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.