மீண்டும் புதிய உச்சம்.. அதிர்ச்சியில் ஆழ்த்தும் தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை என்பது, கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், 1 லட்சம் ரூபாயை எட்டும் என்று கணிப்படுகிறது. இதனால், தங்கத்தை முதலீடாக வாங்கும் சாமானிய மக்கள் சற்று கவலை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 7 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 80 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், நேற்று 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று 640 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News