தங்கத்தின் விலை என்பது தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. இதனால், தங்கத்தை எப்படி வாங்குவது என்று, சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். மேலும், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம், 64 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை, அதிகரித்து, பலரையும் அதிர்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றது.
இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 120 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நேற்று 64 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 960 ரூபாய் குறைந்து, 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை, 1 கிராம் தங்கம் எந்தவித மாற்றமும் இல்லாமல் 107 ரூபாய்-க்கும், 1 கிலோ தங்கம், 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.