தங்கத்தின் விலை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த 1 வாரத்தில் மட்டும், ஆயிரம் ரூபாய்க்கு மேல், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு இருக்க, தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் தெரியவந்துள்ளது.
அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 35 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று 64 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 280 ரூபாய் அதிகரித்து, 64 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமுமின்றி, ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.