நடுத்தர வர்க்க மக்களின் அடிப்படையான முதலீடுகளில் ஒன்றாக இருப்பது தங்கம் தான். ஆனால், கடந்த சில மாதங்களாக, தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது.
அதன்படி, நேற்று 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 35 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நேற்று 63 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 280 ரூபாய் அதிகரித்து, 63 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, 64 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.