நாம் கையில் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு என்பது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக் கொண்டே வரும். இதனை தான், பொருளாதாரத்தில் பணவீக்கம் என்று கூறுவார்கள். இதன்காரணமாக, பணத்தை வேறு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்துக் கொள்ள வேண்டிய முக்கியம்.
அதற்கு, மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் உள்ளது. ஆனால், சமீப காலங்களாக, தங்கத்தின் விலை என்பது உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு இருக்க, தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது.
அதன்படி, நேற்று 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 40 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நேற்று 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், 320 ரூபாய் அதிகரித்து, 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.