தங்கத்தின் விலை என்பது இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பல மடங்கு அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை கனிசமான அளவில் குறைந்தது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.
இதற்கிடையே, சில நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை, 2 நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. அதாவது, தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 270 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று 66 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், 68 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.