தங்கத்தின் விலை.. ஏறுமுகமா? இறங்குமுகமா?

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை மாற்றம் அடையும். சமீப காலங்களாக, தங்கத்தின் விலையானது, கடுமையான ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

இடையிடையே, சில நேரங்களில் மட்டும் குறைவான அளவில், தங்கத்தின் விலை குறைகிறது. இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 45 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், நேற்று 64 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 360 ரூபாய் அதிகரித்து, 64 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளியின் விலையை பொறுத்தவரை, நேற்று 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம், இன்று 2 ரூபாய் அதிகரித்து 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், நேற்று 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளி, இன்று 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News