தங்கம் விலை மீண்டும் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!

பொருளாதார வீழ்ச்சி, போர், சர்வதேச வர்த்தக நிலை போன்றவற்றின் காரணமாக, தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 4 மாதங்களாக, தொடர் விலை ஏற்றத்தை தங்கம் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 20 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நேற்று 66 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 160 ரூபாய் அதிகரித்து, 66 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News