முதலீடு செய்ய நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது பெரும்பாலும் தங்கமாக தான் உள்ளது. ஆனால், அந்த தங்கத்தை வாங்குவது, ஏழைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை இருப்பதால், பலரும் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின்அண்டை நாடுகளில், எந்த அளவில் தங்கத்தின் விலை உள்ளது என்று தற்போது பார்க்கலாம். அதன்படி, தாய்லாந்து நாட்டில் ஒரு கிலோ தங்கம் 51 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலோசியாவில் ரூ.55 லட்சத்திற்கும், சிங்கப்பூரில் ரூ.57 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
துபாயில் 53 லட்சத்து 79 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு கிலோ தங்கம் ரூபாய் 62 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு வித்தியாசம் இருப்பதால் தான், வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு தங்கம் சட்டவிரோதமாக கடத்தி வரப்படுகின்றன.
பொதுவாக ஒரு பயணி வெளிநாடுகளுக்கு சென்று வரும் போது, குறிப்பிட்ட அளவு தங்கத்தை எடுத்து வரலாம். அதாவது ஆண்கள் என்றால் 20 கிராமும், பெண்கள் என்றால் 40 கிராமும் கொண்டு வரலாம் என்பது விதியாக உள்ளது.