அடேங்கப்பா! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.5,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.46,880-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.5,875-க்கும், சவரனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.47,000-க்கும் விற்பனையாகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை நாள்களாக இருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதே போன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.50க்கும் விற்பனையாகிறது.

RELATED ARTICLES

Recent News