தமிழக முழுவதும் நேற்றைய தினம் அக்ஷய திருதியில் தங்கத்தின் விற்பனை குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்தி லால் ஜலானி செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் அக்ஷ்ய திருதியை முன்னிட்டு இந்தியா முழுவதும் 155 ரூபாய் அதிகரித்தது. நேற்றைய தினம் ரூபாய் 1240 ஒரு சவரனுக்கு அதிகரித்தது. இருப்பினும் 15 நாட்களுக்கு முன் பதிவு செய்ததன் காரணமாக வியாபாரம் பாதிக்கவில்லை.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சூழல் போன்றவற்றால் தொடர்ந்து தங்கம் விலை உயரும். இருப்பினும் அக்ஷய திருதியை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30% விற்பனை அதிகரித்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விற்பனை அதிகரித்துள்ளது.
கடைகள் திறக்கும் போது விலை அறிவிப்பு வரும் அதன் அடிப்டையில் நேற்று காலையிலேயே கடை திறப்பதால் மூன்று முறை விலை மாற்றம் ஏற்பட்டது. எப்போதாவது இது போல நிகழும். தங்கம் விலை குறைய வாய்ப்பு குறைவு.. உலகின் உண்மையான கரன்சி தங்கம் மட்டுமே அதனால் தங்கம் விலை மேலும் உயர்வு தான் ஏற்படும்.
அக்ஷ்ய திருதியை தினத்தில் வாடிக்கையாளர்களின் வருகை மிக சிறப்பாக இருந்தது.. 80% விற்பனை முன்பதிவு மூலமே நடைபெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் வியாபாரம் மந்தமாக இருந்த நிலையில். நேற்றய தினம் அக்ஷய திருதியில் நன்றாக வியாபாரம் நடைபெற்றது…
2030 ஒரு சவரன் 1 லட்சம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது… ஒரு கிராம் 10 ஆயிரம் கூட வருவதற்கு வாய்ப்பு எனத் தெரிவித்தார்.