தங்கத்தின் விலை அதிகரிப்பு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை என்பது, தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது.

அதன்படி, நேற்று 7 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 65 ரூபாய் அதிகரித்து, 8 ஆயிரத்து 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று 63 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், 520 ரூபாய் அதிகரித்து, 64 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எந்தவொரு மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News