இந்தியாவை பொறுத்தவரை, பொதுமக்களின் அதிகபட்ச சேமிப்பாக, தங்கம் தான் இருந்து வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பெண்கள், அதிக அளவில் தங்க ஆபரணங்களை பயன்படுத்தியும் வருகின்றனர்.
இதனால், தங்கத்தின் மீதான விலை என்பது, இந்தியாவில் சற்று அதிகமாக தான் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்க, சமீபகாலமாக தங்கத்தின் விலை, ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூபாய் 40 உயர்ந்து, 45 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து, 5 ஆயிரத்து 705 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 79-க்கு விற்பனை செய்யப்படுகிறது.