நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள், முதலீடு செய்வதற்கு சிறந்த முறையாக இருப்பது தங்கம் தான். தங்கத்தை தான் எளிதில் அடகு வைத்து பணமாக பெற முடியும்.
இதுமட்டுமின்றி, வட்டியும் குறைவாக இருப்பதால், பெரும்பாலோனோரின் முதல் சாய்ஸாக தங்கம் இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக, தங்கத்தின் விலை, ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
அதாவது, 5 நாட்களில் மட்டுமே ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர், அமெரிக்கா டாலரின் வீழ்ச்சி, ஆகியவற்றின் காரணமாக, பலரும், தங்களது பணத்தை, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூபாய் 47 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலை நீடித்தால், அடுத்த அரையாண்டுக்குள் தங்கத்தின் விலை, 56 ஆயிரம் ரூபாயை எட்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.