கள்ளக்குறிச்சி அருகே புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடையை உடைத்து 281 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் லோகநாதன். இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி புதூர் கிராமத்தில் உள்ள சேலம்-கள்ளக்குறிச்சி சாலையில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ணமஹால் என்ற நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் வழக்கும்போல இரவு கடையை மூடிவிட்டு, கடையில் வேலை செய்யும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பின்னர் லோகநாதனும் வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து கடந்த 8-ஆம் தேதி அதிகாலை 2-மணி அளவில் மர்ம நபர்கள் நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நகைக்கடையின் ஷட்டரை இரும்பு ஆக்ஷா பிளேடால் அறுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து நகைக்கடையின் பூட்டு மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.பின்னர் நகைக்கடையின் நகை பெட்டகத்தை அல்லேக்காக தூக்கி சென்றனர்.
அன்று காலை நகைக்கடை திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கடையின் உரிமையாளர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நகைக்கடைக்கு விரைந்த லோகநாதன் நகைக்கடையை பார்த்து அதிர்ச்சியடைந்து கண்கலங்கிய அவர் நகைக்கடையை மேலும் கீழும் பார்த்தார்.
பின்னர் சோகத்துடன் கடைக்குள் சென்று பார்த்தார்.அங்கு நகைபெட்டியில் இருந்த 280-சவரன் நகைகள், 30- கிலோ வெள்ளி பொருட்கள் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து வரஞ்சரம் போலீசாருக்கு புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர்.
இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் குழுவுடன் நகைக்கடைக்கு வந்து ஆதாரங்களை கைப்பற்றி சென்றனர்.
மேலும் இந்த கடை கடந்த 2-மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சிசிடிவி கேமாராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.மேலும் இதுகுறித்து அருகில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்து 2-டே மாதம் ஆன புதுக்கடையில் தனது கைவரிசையை காட்டிய மர்ப நபர்களை போலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.