உலகக் கோப்பை தொடர், கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. லீக் போட்டிகள், அரையிறுதி போட்டிகள் அனைத்தும் முடிந்து, நாளை இறுதிப் போட்டி, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு, தங்கப் பேட் பரிசாக வழங்கப்படும்.
இந்த பேட்டை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாங்க இருப்பது, கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, இதுவரை 10 போட்டிகள் விளையாடி உள்ள அவர், 711 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில், தென் ஆப்ரிக்க வீரர் குயிண்டன் டிகாக்கும், அவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து வீரர் ரக்சின் ரவீந்திராவும், அதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து வீரர் மிட்சலும் உள்ளனர்.
இந்த 3 வீரர்களின் அணியும், அரையிறுதியில் தோற்றுவிட்டதால், கோலியை முந்த முடியாது. இதனால், விராட் கோலிக்கு தான் தங்க பேட் கிடைக்கும் என்று கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.