குட் பேட் அக்லி வசூல்! 2 நாளில் இத்தனை கோடியா?

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும், அஜித் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும், 2 நாட்களில் மட்டும், 90 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம். இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக விடுமுறை இருப்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News