6 நாள் முடிவில்.., தமிழகத்தில் மட்டுமே பலகோடி வசூல்..

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. கடந்த 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும், அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதால், வசூலில் எந்த குறையும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, 6 நாட்களில், தமிழகத்தில் மட்டும், 114 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம். மேலும், இந்த திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் , 6 நாட்களுக்கு பிறகும், விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News