அஜித், த்ரிஷா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம், கடந்த 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும், 9 நாட்களில், 218 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். இந்த தகவல், ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.