அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
ரிலீஸ்-க்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் 30 நிமிட காட்சிகளை, வியாபார நோக்கத்திற்காக, சில முக்கிய நபர்களுக்கு காண்பித்துள்ளார்களாம். அப்போது, படத்தை பார்த்த அவர்கள், மிரண்டுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், படம் தரமாக வந்துள்ளது என்று, அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு, தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.