மார்க் ஆண்டனி என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு, குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
அஜித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், 700-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து, இந்த காட்சியை படமாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வியாபாரம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, நெட்பிளிக்ஸ் நிறுவனம், இப்படத்தை ரூபாய் 95 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.
இதன்மூலம், படத்தின் பட்ஜெட்டில் கால் பங்கு படப்பிடிப்புக்கு முன்னதாகவே கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.