அஜித், த்ரிஷா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று இந்த திரைப்படம், திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், ப்ரி புக்கிங்கில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை 50 லட்சம் ரூபாய்க்கும் மேல், இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.
இதே வேகத்தில் சென்றால், ப்ரீ புக்கிங்கில் பெரும் வசூல் சாதனையை, இந்த படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.